சிறந்த பள்ளியை தேர்வு செய்வது எப்படி?
பள்ளி சேர்க்கும் வயதில் குழந்தை உள்ள எல்லா பெற்றோர்களும் சந்திக்கும் கேள்வி, சிறந்த பள்ளி எது என்பதாக தான் இருக்கும்.இதை, பாடத்திட்டம் என்ற அடிப்படையில் அணுகாமல், மற்ற விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், உங்கள் குழந்தைக்கான சிறந்த பள்ளியை, தேர்ந்தெடுத்துவிடலாம்.சிலபஸ்மாநில கல்வித்திட்டம், மத்திய கல்வித்திட்டம், உலகளாவிய கல்வித்திட்டம் என்ற மூன்று வகையான பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.ஆனால், எந்த பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும், அப்பள்ளியின் கடந்த கால கல்வி வளர்ச்சி நிலைகளை, ஆய்வு செய்வது அவசியம்.அதாவது அப்பள்ளி, குறிப்பிட்ட பாடத்திட்டத்தை கற்பிக்க, அங்கீகாரம் பெற்று செயல்படுகிதா, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா, பள்ளியில், கல்வியை தவிர கற்றுத்தரப்படும் இணை செயல்பாடுகள் எவை என்பன போன்றவற்றை, நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.அல்லது அப்பள்ளிக்கான இணையதளத்தில், அறிந்து கொள்வதற்கான வசதிகள் தற்போது வந்துவிட்டன. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடமும், உங்களுக்கான சந்தேகங்களை கேட்டறியலாம்.வகுப்பறை சூழல்தற்போதைய சூழலில், வெறும் கரும்பலகை மட்டுமே கொண்ட வகுப்பறைகளால், உங்கள் குழந்தைகளின் சந்தேகங்களை தீர்க்க முடியாது. ஸ்மார்ட் வகுப்பறையாக இருக்கும் போது, கடின பாடங்களை வீடியோ வடிவில் விளக்க முடியும். தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகள் இருந்தால், மாணவர்களின் கற்றல் தேடல் விரிவடையும்.இணை செயல்பாடுகள்கல்வி தவிர, மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் தனித்திறன்களை வெளிக்கொணர, கண்டறிய வாய்ப்பளிக்கும் இடம் பள்ளிகள் தான். இசை, நடனம், யோகா, ஓவியம், பேசுதல், கவிதை எழுதுதல் என, ஏதாவது ஒரு தனித்திறனை வளர்த்தெடுக்கும், பயிற்சி கூடமாக அப்பள்ளி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.விளையாட்டுகல்வியை போலவே, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். சிறந்த விளையாட்டு வீரர்களாக குழந்தைகள் உருவாக, முதல் படி, பள்ளியில் இருந்து தான் துவங்கும். சிறந்த பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு மைதானம் இருக்கிறதா என்பதை கவனிக்க மறந்து விடாதீர்கள்.பாடத்திட்டம், இணை செயல்பாடுகள், விளையாட்டு மட்டுமே, கற்றல் படிநிலைகளாக இருக்காது. ஒழுக்கம், கீழ்படிதல், நன்னெறி கல்வி, சமூக மாற்றத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்தல், மன்றங்கள் மூலம் பொது பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் போன்ற பிற செயல்பாடுகளில் தான், கற்றல் நிலை முழுமையடையும். இவை இருந்தால், அப்பள்ளிதான் உங்கள் குழந்தைக்கான சிறந்த பள்ளியாக இருக்க முடியும்.