பா.ஜ., மும்மொழி கொள்கை தெருமுனை பிரசாரம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜ., சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கம், மும்மொழி கொள்கை விழிப்புணர்வு தெருமுனைப் பிரசாரம் நடந்தது.கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம், திருமலை நாயக்கன்பாளையம், சாமி செட்டிபாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் மும்மொழி கொள்கை குறித்து தெருமுனை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, கல்வியாளர் பிரிவு பிரியதர்ஷினி, முன்னாள் நகர தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் ஸ்ரீஜா, தொகுதி பிரசார பொறுப்பாளர் மயில்சாமி, எல்.ஐ.சி., பாலு உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.