பூமிக்கு இரண்டாவது நிலவு: நாசா சொல்வது இதுதான்!
வாஷிங்டன்: 2025 பி.என்.7' எனும் விண்கல் பூமியின் இரண்டாவது நிலவு போல 2083 வரை சுற்றி வரும் என அமெரிக்காவின் 'நாசா' தெரிவித்துள்ளது.பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சராசரி துாரம் 3.84 லட்சம் கி.மீ. இந்நிலையில் ஹவாய் பல்கலை விஞ்ஞானிகள் '2025 பி.என்.7' எனும் சிறிய விண்கல்லை 2025 ஆக. 29ல் கண்டறிந்தனர். இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே (2.99 லட்சம் கி.மீ.,) பூமியை போலவே சூரியனை சுற்றி வருகிறது. இது 1960 முதல் சுற்றுகிறது.2083 வரை சுற்றி வரும், பின் அதிலிருந்து விலகி சென்று விடும். இது 'பூமியின் இரண்டாவது நிலவு போன்றது' (குவாசி மூன்) என 'நாசா' விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் அகலம் 62 அடி. நீளம் 98 அடி. இது நிலவை விட பூமிக்கு அருகில் சுற்றி வந்தாலும் இதை வெறுமனே பார்க்க முடியாது.ஏனெனில் இதன் அளவு மிகச்சிறியது. சக்திவாய்ந்த டெலஸ்கோப் உள்ளிட்ட உபகரணங்களால் மட்டுமே பார்க்க இயலும். இந்த விண்கல்லால், பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. இதற்கு முன் ஏழு 'குவாசி மூன்' பூமியை சுற்றி சென்றுள்ளன.