சிலம்பம் போட்டியில் வெற்றி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி: சென்னையில் நடந்த சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வடக்கனந்தல் பாரதி பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.சென்னை, மயிலாப்பூர் உள் விளையாட்டு அரங்கில் தேசிய தென்றல் சிலம்பம் சங்கம் மற்றும் இந்திய இளைஞர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் இணைந்து கடந்த 8ம் தேதி வட மண்டல மாவட்ட அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி 2026 நடந்தது.இதில் கள்ளக்குறிச்சி அடுத்த வடக்கனந்தல் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஒற்றைக்கோல், இரட்டை கோல், தோதுமுறை, சுருள், வேல்கம்பு, குத்து வரிசை, வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாரதி பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேர் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் வரதராஜன், பயிற்சியாளர் சரிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.