உள்ளூர் செய்திகள்

தொடக்க கல்வி பட்டய தேர்வு இன்று துவக்கம்

ஈரோடு: தொடக்க கல்வி பட்டய தேர்வு இன்று துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல் மதியம், 01:00 மணி வரை தேர்வு நடக்கிறது.மாவட்டத்தில் முதலாமாண்டு மாணவ, மாணவியர், 326 பேர் எழுதுகின்றனர். இன்று கற்கும் குழந்தை, 20ல் கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும் - 1, 22ல் தமிழ் - தெலுங்கு - உருது கற்பித்தல் - 1, இளஞ்சிறார் கல்வி -1 தேர்வு நடக்கிறது. 26ல் ஆங்கிலம் கற்பித்தல் - 1, 29ல் கணிதம் கற்பித்தல் - 1, ஜூன் 2ல் அறிவியல் கற்பித்தல் - 1, ஜூன் 4ல் சமூக அறிவியல் கற்பித்தல் - 1 தேர்வு நடக்கிறது.இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள், 407 பேருக்கு 19ல் இந்திய கல்வி துறை தேர்வுடன் துவங்குகிறது. 21ல் கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும் - 2ம், 25ல் தமிழ் - தெலுங்கு - உருது கற்பித்தல், இளஞ்சிறார் கல்வி - 2ம், 27ல் ஆங்கிலம் கற்பித்தல் - 2, ஜூன் 1ல் கணிதம் கற்பித்தல் - 2, ஜூன் 3ல் அறிவியல் கற்பித்தல் - 2, ஜூன் 5ல் சமூக அறிவியல் கற்பித்தல் - 2 தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கலைமகள் கல்வி நிலையத்தில் அனைத்து தேர்வுகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்