பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் பயணீர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் மேல்நிலைப் பள்ளியில் பயனீர் மில் உயர்நிலைப் பள்ளி, 1988ம் ஆண்டு மாணவர்கள் அசோசியேசன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், பயனீர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி, தம்பு மேல்நிலைப் பள்ளி, நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 10 மற்றும் பிளஸ், 2 வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவில் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் உள்ளிட்டோர், தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.