நுால் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருப்பத்துார்: திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்ட மைய நுாலகத்தில், போலி புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.தமிழகத்தில், அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகம் சார்பில், போலி புத்தகம் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், திரப்பத்துார் மாவட்ட மைய நுாலகத்தில், திருப்பத்துார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையிலான, 5 பேர் கொண்டு போலீஸ் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் அகல் விளக்கும், பீனிக்க்ஸ் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்த, அவை போலியான புத்தங்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தில், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான, 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில், 23லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2,498 போலி புத்தகங்களை கண்டறிந்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.