கல்வி உரிமைச் சட்டம் நவோதயா பள்ளிகளுக்கு செல்லாது
ஆர்.டி.இ., எனப்படும் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளில் 2 பிரிவுகள் மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிகளுக்குச் செல்லாது என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் சேர நுழைவுத் தேர்வு போன்ற முறைகள் கூடாது என்பதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது இந்த சட்டத்தின் 2 பிரிவுகளில் உள்ளன. நவோதயா பள்ளிகளுக்கு இது பொருந்துமா என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்திடம்கருத்துக் கோரியது. அதற்கு அவர் இந்த சட்டத்தின் விதிகள் நவோதயா பள்ளிகளுக்குப் பொருந்தாது என தெரிவித்துள்ளார். இதே போலவே மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலும் கூறியுள்ளார். எனினும் மத்திய சட்ட அமைச்சகம் இது தொடர்பாக கல்விச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.