வேளாண் அமைச்சகம் - என்.ஐ.ஐ.டி. ஒப்பந்தம்
நாட்டின் முக்கிய ஐ.டி. பயிற்சியாளர்களில் ஒன்றான என்.ஐ.ஐ.டி -ஐ மத்திய வேளாண் அமைச்சகம் பயிற்சி அளிக்கும் பங்குதாரராக நியமித்துள்ளது. என்.ஏ.டி.ஆர்.எஸ். என்று அழைக்கப்படும் தேசிய கால்நடை நோய் அறிவிப்பு அமைப்பு -ஐ பயன்படுத்துபவர்களுக்கு சிறப்பு ஐ.டி. பயிற்சியை வழங்கும்பொருட்டு, என்.ஐ.ஐ.டி. மற்றும் வேளாண் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பயிற்சியை பெறுவதன் மூலம் என்.ஏ.டி.ஆர்.எஸ். பயன்பாட்டாளர்கள் அடிப்படை கணினி அறிவைப் பெற்று தங்களின் பணியை திறம்பட செய்ய முடியும். மேலும் சமகால ஐ.டி. அறிவையும் பெற முடியும். இந்த பயிற்சியானது நாடு முழுவதும் வழங்கப்படுகிறது. முதல் தடவையாக, அடுத்த 15 நாட்களில் ஏறக்குறைய 7700 பேருக்கு பயிற்சி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.