உள்ளூர் செய்திகள்

இக்னோவில் குறுகிய கால ரஷ்ய மொழிப் பாடம்

இது குறித்து இக்னோவின் செய்திக் குறிப்பில், இக்னோவின் வெளிநாட்டுக் கல்வி நிலையத்துடன், ரஷ்யாவின் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின்படி, இக்னோவில் 2 மாதம் பயிலும் ரஷ்ய மொழி மற்றும் கலாச்சாரப் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. ரஷ்யாவின் அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் துணை இயக்குநர் எலினா ஷ்டப்கினா, ரஷ்ய மொழியை பல கல்வி நிலையங்கள் கற்பிக்கின்றன. ஆனால் ரஷ்ய மொழித் தரத்துடன் கற்பிக்கப்படுவதில்லை. இதனால், ரஷ்ய மொழியைப் படித்திருந்தாலும் கூடுதலாக ஒரு தேர்வினை எழுதித்தான் வேலைக்கு தகுதி பெற வேண்டி உள்ளது என்றார். இக்னோவுடன் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, எங்களது ஆசிரியர்களின் உதவியுடன், ரஷ்ய மொழியில் பணியாற்றுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் உருவாக்கும் வகையில் இந்த பாடப்பிரிவு அமையும் என்றும் எலினா கூறினார். வகுப்புகள் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்