உள்ளூர் செய்திகள்

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுமா?

தரமின்மை பிரச்சினையில் நாட்டின் பல நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்களின் தகுதியை காப்பாற்ற போராடும் இந்த நேரத்தில், ஒரு உயர்நிலை கமிட்டியானது இது விஷயமாக சில முக்கிய விஷயங்களை பரிந்துரைத்துள்ளது. சிறப்பான முறையில் செயல்படும் கல்லூரிகள், படிநிலையில் பல்கலைக்கழகங்களாக உயர்த்தப்பட வேண்டும். இதன்மூலம் அந்த கல்லூரிகள் புதிய சவாலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள நேரம் கிடைக்கும் என்று சுயாட்சி அதிகாரம் கொண்ட மத்திய கல்வி நிறுவனங்களுக்கான ஒரு விரிவான கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களாக இணைக்கும் செயல்பாட்டில் தர நிலைகள் பின்பற்றப்பட்டதில்லை மற்றும் பின்பற்றப்படுவதில்லை. எனவே இப்போதைய சூழ்நிலையில் கல்லூரிகளை, பல்கலைகளாக இணைக்கும் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது. நாட்டில் பல்கலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியம் என்றாலும், நன்கு செயல்படும் கல்லூரிகளை தரம் உயர்த்துவது மட்டுமே பொருத்தமான வழி என்று கூறியுள்ளதுடன், சில மாநிலங்களில் பல கல்வி நிறுவனங்களை சேர்த்து பல்கலை நிலையை வழங்கலாம் அல்லது அவை கல்வி மற்றும் நிர்வாக விஷயங்களில் சுயாட்சியுடன் செயல்படலாம். மேலும், மத்திய கல்வி நிறுவனங்கள் உலகின் எந்த நாட்டவரையும் ஆசிரியர்களாக அமர்த்திக் கொள்ளவும், கல்வி கட்டணம் மற்றும் உதவித் தொகைகளை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். அதேசமயத்தில் மத்திய கல்வி நிறுவனங்கள் உலகின் எந்த பகுதியிலிருந்தும் பிரபலங்களை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அழைக்க அனுமதிக்கப்பட வேண்டும். அதேசமயம் அந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்குதலின் விவரம் பற்றி மத்திய மனிதவளத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் அமைச்சரகம் அதற்கு தனது பதிலை தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய கல்வி நிறுவனங்கள் நிதி சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த கல்வி நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனிதவள அமைச்சகத்தால் அமைக்கப்படும் வெளியுறவு சமநிலை மதிப்பாய்வு வாரியத்தால்(இ.பி.ஆர்.பி) விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த இ.பி.ஆர்.பி. கமிட்டியானது, பல்கலைகள் சர்வதேச தரத்தில் உயர்வதற்கு உதவ வேண்டும் என்பன போன்ற பல பரிந்துரைகளை உயர்மட்டக் குழு வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்