பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவு - 1,05,133 பேருக்கு ஒதுக்கீடு!
28 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,929 பேர். அவர்களில் 59,300 பேர் வரவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 496 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 35.95%. இறுதிநாளில் 5,516 பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் பாதிக்கும்மேல், அதாவது, 2,964 பேர் வரவில்லை. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 55 பேர். இறுதியாக, 2,497 பேர் ஒதுக்கீடு பெற்றனர். கடைசி நாளின் ஆப்சென்ட் விகிதம், மற்ற 27 நாட்களையும்விட, மிக அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய ஆப்சென்ட் விகிதம் 53.73% ஆகும்.