நாகர்கோவில் மருத்துவக் கல்லுாரி எம்.பி.பி.எஸ். இடங்களை 150ஆக அதிகரிக்க நடவடிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையை, வரும் கல்வியாண்டில், 150 ஆக அதிகரிக்க பணிகள் நடந்து வருகின்றன என, மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் வடிவேல் முருகன் கூறினார். அவர் கூறியதாவது: நாகர்கோவில் மருத்துவக் கல்லுாரியில் வசதிகளை மேம்படுத்தி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இங்கு, 100 எம்.பி.பி.எஸ்., சீட்களே உள்ளன. இதை, 150 -ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிந்து விட்டன. அடுத்த கல்வியாண்டு முதல் இதற்கான அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறைகளில் மட்டும் பட்ட மேற்படிப்பு உள்ளது. கூடுதல் பரிவுகளில் பட்ட மேற்படிப்பு துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.