உள்ளூர் செய்திகள்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 19ல் மண்டல அளவில் போட்டி

உடுமலை: புதிய பாரத எழுத்தறிவு திட்ட கொண்டாட்டம் மற்றும் மாநில எழுத்தறிவு விருதுக்கான மண்டல அளவிலான போட்டிகள், கோவையில் செப்., 19 மற்றும் 20ம் தேதிகளில் நடக்கிறது.இதில் ஓவியப்போட்டி, சிறுகட்டுரை, கவிதை, கோலப்போட்டி, பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள், பாரம்பரிய உணவு தயாரித்தல், நாட்டுப்புற பாடல், பரதநாட்டியம், இசைக்கருவி வாசித்தல், ஒயிலாட்டம், கும்மியாட்டம், தேவராட்டம், காவடி, குறுநாடகம், மாறுவேடம், பாரம்பரிய கலைகள், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட போட்டிகள் இடம் பெறுகின்றன.இப்போட்டிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், கற்போர், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் விபரங்களை, வாட்ஸ் ஆப் குழுவில் பதிவு செய்வதற்கும், கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்