உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தை படிப்புக்கு மாதம் ரூ. 2 ,000 உதவித்தொகை

போடி: குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருந்து, கல்லூரியில் முதுநிலை பட்டம் படித்தால், இந்திரா காந்தி ஒரே பெண் குழந்தை திட்டத்தின் கீழ், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில், அரசு குழந்தை தொட்டில், இரண்டு பெண் குழந்தை இருந்தால் அவர்களது பெயர்களில் தலா 10 ஆயிரம் வீதம் அரசு டெபாசிட் செய்து வருகிறது. பெண்களை மேல் படிப்பு படிக்க வைக்க ஏழைகளால் முடிவதில்லை. பள்ளி படிப்போடு முடித்து விடுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் குடும்பத்தில், ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து கல்லூரியில் முதுநிலை பயின்றால், இந்திரா காந்தி ஒரே பெண் குழந்தை திட்டத்தின் கீழ், மத்திய அரசு பல்கலை கழக மானிய நிதியில் மாதந்தோறும் 2,000 ஆயிரம் ரூபாய் 20 மாதம் வழங்கப்படுகிறது. இதற்காக தேனி மாவட்டம், போடி சி.பி.ஏ., கல்லூரியில் முதல்வர் ராஜராஜன் முயற்சியால் உதவித்தொகை பெற ஐந்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்