டிஜிட்டல் சர்வேயை நிறுத்த உத்தரவு; மாணவர்களுக்கு 3 நாள் விடுமுறை
கோவை: நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக்க, வேளாண் பணிகள் தொடர்பாக, டி ஜிட்டல் சர்வே எடுக்கப்பட்டது.மத்திய அரசிடம் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நேர கட்டாயத்தில், தமிழகத்தில் வேளாண் பல்கலை மாணவர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.வேளாண் பல்கலை மாணவர்கள், மாநிலம் முழுதும் நவ., 4ல் சர்வே பணியை மேற்கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அப்பணியை மேற்கொள்ள இயலாதென பல்கலை நிர்வாகத்திடம் மாணவர்களும் கூறினர்.இப்பணியை நிறுத்த, வேளாண் துறை அறிவுறுத்தியதால், சர்வே பணிகளை முடிப்பதாக பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.வேளாண் பல்கலை டீன் ரவீந்தரனிடம் கேட்ட போது, சர்வே நிறுத்தப்படவில்லை. திட்டமிட்ட நாட்கள் இவ்வளவு தான். மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, விடுமுறை அளித்துள்ளோம், என்றார்.மாணவர்கள் கூறுகையில், வரும் 28ம் தேதி வரை சர்வே பணி இருக்கும் என்றனர். எங்கள் குறைபாடுகளை பல்கலை நிர்வாகத்திடம் தெரிவித்தோம். இதனால், பணியை முடித்துக் கொள்ளலாம் என்று கூறி, மூன்று நாள் விடுமுறை அறிவித்தனர் என்றனர்.