அரசு தொழிற் பயிற்சி நிலைய கலந்தாய்வில் 350 மாணவர்களுக்கு சேர்க்கை
கடலூர்: கடலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடந்த கலந்தாய்வில், 350 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு துவங்கியது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வெல்டர், ஒயர்மேன், பிளம்பர், கட்டிங் அண்டு டெய்லரிங், எம்ராய்டரிங் உள்ளிட்ட தொழிற்பிரிவுக்கு நேற்று வரை கலந்தாய்வு நடந்தது. இதில், பங்கேற்க மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலை முதல் வரத் துவங்கினர். முதல்வர் சையது சலீம் தலைமையில் நடந்த கலந்தாய்வில், 350 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.