பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழா: 47,450 பேருக்கு பட்டம்
விழாவில், முதுநிலை மாணவர்கள் 15 ஆயிரத்து 478 பேர், இளநிலை மாணவர்கள் 31 ஆயிரத்து 991 பேர், எம்.பில்., மாணவர்கள் 1,622 பேர், பிஎச்.டி., மாணவர்கள் 258 பேர், டிப்ளமோ இன் சயின்ஸ் படிப்பில் ஒருவர் என, மொத்தம் 47 ஆயிரத்து 450 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதுகுறித்து பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறுகையில், “பாரதியார் பல்கலையில் இருந்து பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10-12 சதவீதம் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கலைப் பாடங்களில் மட்டும் 3,136 பேர் பட்டம் பெறுகின்றனர். தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மத்திய தேர்வாணையக்குழு உறுப்பினர் பாலகுருசாமி ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கின்றனர்,” என்றார்.