பொறியியல் தமிழ் மீடிய படிப்புகளில் சராசரியாக 50 பேர்
கடந்த கல்வியாண்டில் பொறியியல் படிக்க விரும்பும் தமிழ் மீடியத்திலேயே படித்த மாணவர்களுக்காக, சில குறிப்பிட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் மட்டும் தமிழ் மீடியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கும் சேர்த்தே தற்போது பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சிவில் இன்ஜினியரிங் தமிழ் மீடியப் படிப்பில் 657 இடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 717 இடங்களும் உள்ளன. இதில் சிவில் இன்ஜினியங்ரி தமிழ் மீடியத்தில் 55 இடங்கள் நிரம்பியுள்ளன. இதில் 19 மாணவர்களும், 36 மாணவிகளும் அடங்குவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தமிழ் மீடியப் படிப்பில் 57 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 51 மாணவர்களும், 6 மாணவிகளும் அடங்குவர். இதுவரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்று மொத்தம் 41,084 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 21,309 மாணவர்களும், 19,775 மாணவிகளும் அடங்குவர்.