உள்ளூர் செய்திகள்

இந்திய கப்பல் படை பணி வாய்ப்பு

இந்தியக் கப்பல் படையில் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள எழிமலாவில் உள்ளது. இங்கு அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் டெக்னிகல்/எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் குறுகிய கால நிலைப் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளன. என்னென்ன பிரிவுகள்:குறுகிய கால நிலைப் பணிகளில் டெக்னிகல் பிரிவில் ஆண்களுக்கு எலக்ட்ரிகல், இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் எக்சிக்யூட்டிவ் பிரிவு ஜெனரல் சர்வீஸ் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண்களுக்கு டெக்னிகல் வகையிலான நேவல் ஆர்க்கிடெக்சர் பிரிவு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது:ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் 19 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 02.07.1988 முதல் 01.07.1993க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி:விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெக்கானிகல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் அண்டு புரொடக்சன், மெட்டலர்ஜி, ஏரோனாடிகல், ஏரோஸ்பேஸ், கண்ட்ரோல் அண்டு புரொடக்சன், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏவியானிக்ஸ், ஐ.டி. போன்ற பிரிவுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் பிரிவுக்கு ஏற்றபடி விண்ணப்பிக்க முடியும். உடல் தகுதி:இந்தியக் கப்பல் படையின் மேற்கண்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரமும், பெண்கள் குறைந்த பட்சம் 152 செ.மீ., உயரமும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஏற்ற உடல் எடையும் தேவைப்படும். பார்வைக் குறைபாடு உடையவர்கள் சில நிபந்தனைகளுக்கு விண்ணப் பிக்கலாம் என்ற போதும், மாலைக்கண் நோய், நிறக் கோளாறு உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிப்பது எப்படி:இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியை நிரப்பி, விண்ணப்பிக்கும் கவரின் மேற்பகுதியில் Application for UES (Technical Branch/ Executive Branch) மற்றும் Name of College & District (City),State_______ என்று எழுதி அனுப்ப வேண்டும்.  முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு 18.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முகவரி: The Flag Officer Commanding-in-Chief,  (for Command Recruitment Officer), Headquarters, Southern Naval Command, Naval Base, Kochi - 682 004 இணையதள முகவரி: http://www.nausena-bharti.nic.in/pdf/UES/AdvEng.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்