உள்ளூர் செய்திகள்

தொலைமுறை கல்வி தேர்வு முடிவு:இணையதளத்தில் வெளியீடு

அழகப்பா பல்கலை தொலைமுறை கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம்- 2011ல் நடந்த (பி.லிட்., பி.சி.ஏ., அதில் நேரடி இரண்டாமாண்டு, பி.காம்., அதில் நேரடி இரண்டாமாண்டு), சுய உதவி குழு மேலாண்மை, பி.ஜி.டி.ஐ.எம்.ஏ., எம்.பி.ஏ., (பன்னாண்டு வணிகம்), எம்.எஸ்.சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை, http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள்  காணலாம். முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலை இணையதளத்தில் பெறலாம். மறுமதிப்பீட்டு கட்டணம் ரூ.400 டி.டி., எடுத்து பல்கலை தேர்வு பிரிவுக்கு அனுப்புமாறு, தேர்வாணையர் வெ.மாணிக்கவாசகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்