உள்ளூர் செய்திகள்

சேர்க்கை கிடைத்தும் சேராமல் இருப்பது ஏன்?

முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற 5 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவில்¨. இந்த காலியிடங்கள் இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில், பங்கேற்று சேர்க்கை கடிதம் பெறும் மாணவர்களில் சிலர் அவர்களுக்கான கல்லூரியில் சேராமல் இருந்தால், அந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது. விண்ணப்பித்து, கலந்தாய்விற்கு வந்து கல்லூரியை தேர்வு செய்து சேர்க்கை கடிதம் பெறும் மாணவர்கள், ஏன் கல்லூரியில் சேர்வதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, சில சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், மாணவர்களுக்கு அளிக்கும் கட்டண அதிர்ச்சிதான் காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் வரை வசூலிக்கலாம் என்று நீதிபதிக் குழு அறிவித்துள்ளது. ஆனால், பல சுயநிதி மருத்துவக கல்லூரிகள், கல்விக் கட்டணமாக 2.5 லட்சத்துடன் சேர்த்து, சிறப்புக் கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், உணவு, தங்குமிடக் கட்டணம் எனக் கூறி சுமார் 6 லட்சம் வரை பட்டியலிட்டுக் கொடுத்து விடுகின்றது. இதனால், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர சேர்க்கை கடிதம் பெற்ற பல மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தவிக்கின்றனர். இதனால் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் ஏராளமான காலியிடங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு, கல்லூரியில் சேராத மாணவர்கள், கலந்தாய்வின் போது செலுத்திய முன் பணமான ரூ.25 ஆயிரத்தில், ரூ.12,500 (பாதி தொகை) மட்டுமே மருத்துவக் கல்வி தேர்வுக் குழு மாணவர்களிடம் திரும்ப அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்