சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை முறைப்படுத்த குழு
இந்த குழுவின் கூட்டம் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் சேர்க்கை குறித்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது, தமிழ்நாடு தனியார் தொழில் கல்லூரிகளின் சங்கம்-சுகாதாரம் அறிவியல் சங்கத்துக்கு அதன் உறுப்புக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளில் 2011-12ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டில் கீழ் மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதுபோன்று, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளுக்கான சங்கத்துக்கு, அதன் 67 உறுப்புக் கல்லூரிகளில் விதிமுறைகளின்படி செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு மட்டும் 2011-12ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் உறுப்புக் கல்லூரிகளின் விவரம் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர, வேறு எந்த சங்கங்களோ, கல்லூரிகளோ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது என குழு அறிவித்துள்ளது. அவ்வாறு ஏதேனும் சேர்க்கை நடைபெற்றால் அது செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.