உள்ளூர் செய்திகள்

பிரான்ஸ், ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் பெயரில் அறிவியல், இலக்கியம், மருத்துவம் மற்றும் அமைதிக்காக நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய்ப்பகுதி புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான பாபிலோமா வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்த ஜெர்மன் விஞ்ஞானி ஹரால்ட் சுர் ஹுசனுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி., வைரசின் செயல்பாடுகள், எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் விதம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பேரி சினோசி, மோன்டாக்னியர் ஆகியோருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்