உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் ஆராய்ச்சி மையம் துவக்க முயற்சி

திண்டுக்கல்: கம்பியில்லா தொலை தொடர்பியல் ஆராய்ச்சி மையம் உருவாக்குவதற்கான முயற்சி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் "லேப்வியூ அகாடமி" என்ற அமைப்பு 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பது மற்றும் நவீனமுறையில் உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இதன் குறிக்கோளாகும். இந்த அமைப்பின் மூலம் பயற்சி பெறும் மாணவர்களுக்கு "லேப்வியூ அசோசியேட் டெவலப்பர்" என்ற சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் கல்லூரியில் கம்பியில்லா தொலை தொடர்பியல் ஆராய்ச்சி மையம் உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்