நர்சிங் பட்டய படிப்பு: விண்ணப்பம் வினியோகம்
மருத்துவக் கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும், நர்ஸ் பயிற்சி பள்ளிகளில், பட்டயப் படிப்புக்கான, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பம், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 17 வயது முதல், 35 வயது வரை உள்ளவர்கள் விண்ப்பிக்கலாம். இதற்கு, பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடப் பிரிவுகளில், 40 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் இதர பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் காலம் முதல் கலந்தாய்வு முடியும் வரை, முழு தகவல்களையும், http://www.tnhealth.org மற்றும் www.tn.gov.in இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.