உள்ளூர் செய்திகள்

யு.பி.எஸ்.சி., உறுப்பினராக வினய் மிட்டல் நியமனம்

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக, வினய் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவர் வினய் மிட்டல். இவர், ஜூன், 30ம் தேதி, அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.,), எட்டாவது உறுப்பினராக, கடந்த, 8ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆறு ஆண்டு காலத்திற்கு அல்லது 65 வயது முடியும் வரை, இந்தப் பதவியில் நீடிப்பார். டி.பி.அகர்வால் தலைமையிலான, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில், ஏற்கனவே, ஏழு உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது, மிட்டல் எட்டாவது உறுப்பினராகியுள்ளதால், இன்னும், இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்