தமிழக பள்ளி மாணவருக்கு தேசிய விருது
சென்னை: கோல்கட்டாவில் நடந்த அறிவியல் ஆய்வு தேசியக் கண்காட்சியில், செட்டிநாடு வித்யாஷ்ரம பத்தாம் வகுப்பு மாணவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. டிச. 4ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை, கோல்கட்டா அறிவியல் நகரில் அறிவியலில் ஆய்வுக்கான முன் முயற்சி மற்றும் புத்தாக்கங்களுக்கான ஐ.ஆர்.ஐ.எஸ்., தேசியக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் 1,100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக 146 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, செட்டி நாடு வித்யாஷ்ரம பள்ளி மாணவர் விஷ்ணு, தேசிய விருது பெற்ற வெற்றியாளர் ஆனார். ‘கிராமங்களுக்குரிய இணக்கமான எரிபொருள்’ எனும் ஆய்வு அறிக்கையை விஷ்ணு சமர்ப்பித்திருந்தார்.