உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரிக்கை

சென்னை: ‘அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் கனகசுந்தரம், பேராசிரியர் ரத்தினசபாபதி உள்ளிட்ட ஐவர் குழு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை டிச. 16ம் தேதி சந்தித்து சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக மனு அளித்தனர். அதில், ‘10ம் வகுப்பு வரை பல்வேறு வகையான கல்வி திட்டங்கள் இருப்பதை நீக்கி, அனைத்து மாணவர் களுக்கும் ஒரே விதமான கல்வி அளிக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை அடுத்த கல்வியாண்டிலாவது அமல்படுத்த வேண்டும். ‘இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், கல்வியில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் நீங்கி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வியை வழங்க முடியும்’ என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்