முதுநிலை பொறியியல் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் எம்.இ. எம்.டெக். பாடபிரிவுகளுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. காகுப்பம் அண்ணா பல்கலை அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க். ஆகிய பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. பொது பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்.சி., அருந்ததியர், எஸ்.டி. பிரிவினர்களுக்கு 250 ரூபாய் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஜாதி சான்று நகலை காண்பித்து விண்ணப்பங்களை பெற வேண்டும். நேற்று முதல் வரும் 24ம் தேதி வரை சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்ப வினியோகத்தை கல்லூரி முதல்வர் செந்தில் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜசேகரன் தலை மையில் கல்லூரி அலுவலர்கள் விண்ணப்பங்களை வினியோகித்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கு அனுப்ப வேண்டும்.