உள்ளூர் செய்திகள்

புது வகுப்பறைகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒன்றியத்தில் சேதமடைந்த 11 பள்ளிகளில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புது வகுப்பறைகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பெரும்பாலான வகுப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. இவற்றை பி.டி.ஓ., நரசிம்மன் தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து சுப்புத்தேவன் வலசை, அத்தியூத்து, வெண்ணத்தூர், வாலூர், வன்னிவயல், ஆர்.எஸ்.மடை, நரியனேந்தல், வேலாங்குளம், பாப்பாகுடி உள்ளிட்ட 11 கிராமங்களில் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடங்களை இடித்து புது வகுப்பறைகள் கட்டுவது, பாண்டமங்கலம், இரணியன்வலசை, புல்லங்குடியில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சுவர் எழுப்புவது என முடிவு செய்யப்பட்டது. பி.டி.ஓ., கூறுகையில், "மேலதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், பணிகள் துவக்கப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்