சேதமடைந்த பயிற்சி விடுதி: மாணவர்கள் அச்சம்
தாண்டிக்குடி: தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மாணவர் பயிற்சி விடுதி பராமரிப்பில்லாமல் சேதமடைந்துள்ளது. தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் பல்கலை மாணவர்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுவதற்கான விடுதி 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பில்லாததால் ஜன்னல், கதவு, கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. சுவர்கள் விரிசலுடன் காணப்படுகிறது. அடர்ந்த தோட்டத்திற்குள் அமைந்துள்ள இக்கட்டடத்தை சுற்றி புதர் மண்டியிருப்பதால் மாணவர்கள் தங்கியிருந்து பயிற்சி பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சீரமைப்பதற்கான முயற்சியை தோட்டக்கலை ஆராய்ச்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.