இறுதி கட்ட கலந்தாய்வு: மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
புதுச்சேரி: மருத்துவ படிப்பில் சீட் எடுத்தவர்கள் இறுதி கட்ட பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங் கடந்த ஜூன் 24ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடந்தது. இதில் இடம் கிடைத்தவர்கள் நாளைக்குள் (22ம் தேதி) கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப வரும் 24ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் சீட் எடுப்பவர்கள், வரும் 31ம் தேதி துவங்கும் இறுதி கட்ட பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்று சீட் எடுக்காதவர்கள் இறுதி கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என சென்டாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.