உள்ளூர் செய்திகள்

உதவி மருத்துவ அலுவலர் காலியிடங்களுக்கு நேர்காணல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியில் அடங்கிய இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில், உதவி மருத்துவ அலுவலர் (யுனானி) பதவிக்கான 2012ம் ஆண்டிற்கான 24 காலியிடங்களுக்கு 2012, நவம்பர் மாத அறிவிப்பு மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பதவிக்கு கடந்தாண்டு ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடந்தது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான பிற விதிகள் அடிப்படையில் நேர் காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 39 பேர் பட்டியல், கடந்த மாதம் 21ம்தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடந்தது. நேர்காணல் இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்