பரிசு பெற்ற கல்லம்பட்டி நடுநிலைப் பள்ளி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியம் கல்லம்பட்டி நடுநிலைப் பள்ளி, மாவட்ட அளவில் நடந்த, தொற்றா நோய் சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. போட்டியில் ஒரு ஒன்றியத்திற்கு 2 பேர் வீதம் மொத்தம் 24 பேர் பங்கேற்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி வினிதா மூன்றாம் பரிசு பெற்றார். தலைமை ஆசிரியர் ராகவன், ஆசிரியர்கள், கிராமத்தினர் மாணவியை பாராட்டினர்.