உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

மாமல்லபுரம்: கல்பாக்கத்தில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், நகரிய அறக்கட்டளை சார்பில், சுற்றுப்புற மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்பாக்கத்தில், கல்பாக்கம் நகரிய அறக்கட்டளை இயங்கி வருகிறது. அறக்கட்டளை சார்பில், சுற்றுப்புற பகுதி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான உதவித்தொகை, நகரிய உணவக வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, தலா 1,000 ரூபாய்; 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, தலா 2,000 ரூபாய்; பட்டய மற்றும் பட்ட வகுப்பினருக்கு, தலா 2,500 ரூபாய்; பொறியியல் மாணவ, மாணவியருக்கு, தலா 4,000 ரூபாய் என, மொத்தம் 170 பேருக்கு, உதவித்தொகை, பொது அறிவு, போட்டித்தேர்வு ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்