கலசலிங்கம் பல்கலையில் ஒன்கிரிடிட் பாடத்திட்டம் அறிமுகம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் ஒன்கிரிடிட் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பாடத்திட்ட வகுப்பை வேந்தர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். அமெரிக்கா பால் ஸ்டேட் யுனிவர்சிட்டி பேராசிரியர் ஜெய்பாகா, என்பி தியரி என்ற தலைப்பில் வகுப்புகளை நடத்தினார். கணினி மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணித ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் செய்திருந்தார். அவர் கூறுகையில், "இந்தியாவிலேயே முதன்முறையாக இப்பயிற்சி இப்பல்கலையில் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு பேராசிரியர்கள் கணினித்துறை வளர்ச்சி பற்றி இங்கு வகுப்புகள் நடத்துவர்" என்றார்.