உள்ளூர் செய்திகள்

அழகப்பா பல்கலையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வளாக தேர்வு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை பணியமர்த்தல் மையம் மூலம், இணைவு கல்லூரிகளில் 2011 முதல் 2015-ம் கல்வி ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற இளநிலை பட்டதாரிகள் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தமிழ்நாடு, கேரளா கிளைகளில் விற்பனை மேலாளராக பணியாற்றுவதற்கான எழுத்து, நேர்முக தேர்வு, அழகப்பா கல்வியியல் கல்லூரி அரங்கில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. 25 வயதுக் குட்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி அடையாள அட்டை, இளநிலை பட்டசான்றிதழ், மதிப்பெண் சான்றிழ் அசல், நகல் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்