உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் இல்லை அடிப்படை வசதிகள்

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராம பகுதியில் செயல்படும் அரசுபள்ளிகளில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக சேதமடைந்த கட்டடங்களில் தான் வகுப்பறைகள் உள்ளன. இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை. மேல்நிலைபள்ளிகள் சரியாக பராமரிப்பின்றி அவற்றின் கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அவ்வப்போது மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு பயந்து மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம் தொடர்கிறது. தற்போது மழை பெய்வதால் பாடம் நடத்த முடியாமல் குறிப்பிட்ட வகுப்பறையில் அதிகம்பேர் இருக்கவேண்டிய நிலை உள்ளது. குடிநீர் இல்லை இது ஒருபுறம் இருக்க, முறையான குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன. கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் மாணவிகள் அவதிப்படுகின்றனர். சில பள்ளிகளில் விளையாட்டு மைதான வசதியில்லாமல் சிரமப்படுகின்றனர். ஆண்டுதோறும் பராமரிப்பிற்காக நிதி தரப்பட்டாலும் காலம் தாழ்த்தி கிடைக்கிறது என தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர். இலவசமாக பஸ் பாஸ், சீருடை, பேனா,பென்சில் என பல்வேறு உபகரணங்களை அரசு தந்தாலும், அடிப்படை வசதிகள் என்பது போதுமானதாக இல்லை. தேவை நடவடிக்கைஇந்நிலையில் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, கற்பித்தலில் தரமின்மை காரணமாக அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். இந்நிலையை மாற்ற பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்தி இல்லை:சத்திரப்பட்டி முத்துசாமி கூறுகையில்,சத்திரபட்டி மங்கம்மாள் சாலையில் உள்ள அரசு துவக்கபள்ளியின் காம்பவுண்ட் சுவர் தாழ்வாக இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் சைக்கிள் நிறுத்த வசதியில்லை. ஆண்கள் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு மைதான வசதியில்லை. சுற்றி உள்ள எஸ்.ராமலிங்காபுரம், ஆப்பனூர், வடகரை பகுதி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் திருப்திகரமாக இல்லை. காலதாமதமின்றி அரசு நிதி ஒதுக்கி உரிய வசதிகளை செய்து கொடுத்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்