உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித் தொகை வழங்கும் பணி

புதுச்சேரி: அமைப்பு சாரா தொழிலாளர் பிள்ளைகளுக்கு, சிக் ஷா சகயோக் யோஜனா திட்டத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் பணி துவங்கியது. புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில், அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சிக் ஷா சகயோக் யோஜனா திட்டத்தின் கீழ் அளிக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பித்த புதுச்சேரியில் 1798, காரைக்கால் 263, மாகி 139, ஏனாம் 219 என மொத்தம், 2419 உறுப்பினர்களுக்கு தலா 1200 ரூபாய், வீதம் 29 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட உள்ளது. கல்வி உதவித்தொகை வழங்கும் பணியை, சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு, நேற்று துவக்கி வைத்தார். உதவித்தொகை பெற விண்ணப்பித்த உறுப்பினர்கள், நலச் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை, இறுதியாக செலுத்திய சந்தா ரசீது, வங்கி பாஸ்புக் மற்றும் நலச்சங்கத் தினால் அனுப்பிய தபால் அட்டை எடுத்து வந்து, காசோலை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்