உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் கருத்தரங்கு

கோத்தகிரி: கோத்தகிரி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் மற்றும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன், சார்பு தேற்றத்தின், 100வது ஆண்டு விழாவை ஒட்டி, அறிவியல் கருத்தரங்கு நடந்தது. நிறுவன முதல்வர் தேவராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது: கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் தேசிய கணித நாளாக கொண்டாடப்படுகிறது. கணிதமேதை ராமானுஜர் தனது, 32வது வயதிற்குள் சுமார், 4,000 புதிய கணித சமன்பாடுகளை கண்டுப்பிடித்தார். குடும்ப வறுமை, அமைதியின்மை போன்ற பல சிக்கல்களுக்கு இடையில், அவர் தொடர்ந்து கணித ஆய்வு மேற்கொண்டார். அவரது கணித சமன்பாடுகள் இன்றும் ஆய்வு செய்யப்படுகிறது. உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பு தேற்றத்தின், 100வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. உலக அறிவியியலில் அவரது கண்டுபிடிப்பு, பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பிறகு, ஐசக் நியூட்டனின் கணித புலமை புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐன்ஸ்டீன் மற்றும் ராமானுஜரின் கண்டுப்பிடிப்புகள், இன்றுவரை கணிதத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உலகத்தை புரிந்துகொள்ள ஒரே மொழி, கணிதம் மட்டுமே. இவ்வாறு ராஜூ பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்