உள்ளூர் செய்திகள்

தமிழ் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்க போட்டி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே, தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி வரும், 27 மற்றும் 28ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டி, வரும், 27 ம் தேதி காலை, 10 மணிக்கு, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள், 28ம் தேதி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை, 10 மணிக்கு நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள், போட்டி நடக்கும் நாள் அன்று, காலை, 9 மணிக்கு வர வேண்டும். போட்டியில் பங்கேற்போர், தாங்கள் படிக்கும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்றிதழுடன் வரவேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டுமே, ஒரு பள்ளி, கல்லூரியிலிருந்து பங்கேற்கலாம். வேறு மாணவர்கள் கலந்து கொள்ளாத போட்டியில், ஒரே மாணவர், மூன்று போட்டிகளிலும் அனுமதிக்கப்படுவார். கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கு தலா, ஒரு முதல் பரிசு, 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டி நாளன்று மாலையிலேயே முடிவுகள் அறிவிக்கப்படும். போட்டிக்கானத் தலைப்பு போட்டி நடக்கும் அரங்கில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும், முதல் பரிசு பெறும் மாணவர்கள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு, அரசு செலவிலேயே அனுப்பப்படுவர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்