அரசு பள்ளியில் மகளிர் தின விழா
புதுச்சேரி: நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா நடந்தது. பள்ளி ஆசிரியர் ஜானகிராமன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெகதாம்பிகை நாட்டு நல பணித்திட்ட மாணவர்களுக்கு மகளிர் தின விழாவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தனசு நன்றி கூறினார்.