உள்ளூர் செய்திகள்

ஏப்ரலில் சட்ட பல்கலை பட்டமளிப்பு விழா

சென்னை: ’தமிழ்நாடு சட்ட பல்கலை பட்டமளிப்பு விழா, ஏப்ரலில் நடக்கும்’ என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலை பதிவாளர் (பொறுப்பு) சவுந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் எட்டாவது பட்டமளிப்பு விழா, ஏப்ரலில் நடக்க உள்ளது. பட்டம், பட்டயம் பெற தகுதியானவர்கள், ஏப்., 9க்குள், கல்லூரி  முதல்வர்களிடம் விண்ணப்பத்தை பெற்று அதை நிரப்பி, முதல்வர்கள் வழியே பல்கலைக்கு சமர்ப்பிக்க வேண்டும். கடந்த, 2015 மே வரை, பட்டப்படிப்புகளை முடித்து பட்டமளிப்பிற்கு விண்ணப்பிக்காதவர்கள், அவரவர் பயின்ற கல்லூரிகள் வழியே விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்