உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த பண்ணையம் உணவுடன் இலவச பயிற்சி

மதுரை: மதுரை ரூட்செட் பயிற்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய ஆறு நாள் பயிற்சி துவங்கவுள்ளது. பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். 18 - 45 வயதுள்ள, எட்டாம் வகுப்பு படித்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெயர், வயது, கல்வித்தகுதி, அனுபவம், முகவரியுடன், இயக்குனர், ரூட்செட் பயிற்சி நிலையம், விமான நிலைய சாலை, பெருங்குடி, மதுரை - 625 022 என்ற முகவரிக்கு அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு 96262 46671ல் தொடர்பு கொண்டு ஏப்.,11க்குள் முன்பதிவு செய்யலாம் என பயிற்றுனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்