உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்; கிராமத்தினர் முற்றுகை

காரியாபட்டி: பள்ளிக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து வராததால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காரியாபட்டி பெரிய புளியம்பட்டியில் அசேபா தொண்டு நிறுவனம் சார்பாக செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளியில் 50க்கு மேற்பட்டமாணவர்கள் படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன், அந்நிறுவனம் தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாமல் மூடியதால், மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பள்ளியை அரசு கையகப்படுத்தி தொடர்ந்து நடத்த வேண்டும் என அக்கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். அந்த பள்ளியை கல்வி அதிகாரிகளிடத்தில் அந்நிறுவனம் ஒப்படைத்தது. இரு நாட்கள் வரும் ஆசிரியர்கள் அரசு உடனே எடுத்து நடத்த பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருப்பதால், மாணவர்கள் நலன் கருதி, இரு ஆசிரியர்களை அப்பள்ளிக்கு நியமனம் செய்தனர். வாரத்தில் இரு நாட்கள் மட்டும் ஆசிரியர்கள் வந்ததால்,மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என பெற்றோர்கள் கருதினர். பேச்சுவார்த்தை தொடர்ந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வலியுறுத்தினர். நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தினர் நேற்று பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகளிடத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்ததையடுத்து, தாசில்தார்வள்ளி, இன்ஸ்பெக்டர் ராஜராஜன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சரவணக்குமார் (பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும்கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்