உள்ளூர் செய்திகள்

தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்!

தரகம்பட்டி: தரகம்பட்டியில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழுக் கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் நாகசுந்தரம் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்களை அவரவர் பணிபுரியும் இடத்திற்கே திரும்பி அனுப்ப வேண்டும். கடவூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், ராபர்ட் செல்வக்குமார், இருதயசாமி, வட்டார செயலாளர் முனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்