உள்ளூர் செய்திகள்

கல்வி கட்டணத்தை கைப்பற்றிய பறக்கும் படை

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, பறிமுதல் செய்த ஒரு லட்சம் ரூபாயை பறக்கும் படையினர், திருப்பியளித்தனர். எழுமாத்தூர் அடுத்த மண்கரடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாருதி ஜென் காரை சோதனையிட்டு, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில், காரில் வந்தவர், முத்தூர் வி.ஆர்.,நகர் வளர்மதி என்பதும், திண்டலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகனின் படிப்பு செலவு மற்றும் விடுதி கட்டணத்திற்கு பணம் கொண்டு சென்றது தெரிந்தது. ஆவணங்களை சரி பார்த்த பின் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்