உள்ளூர் செய்திகள்

சமூக அறிவியல் தேர்வு செம ’ஈசி’

பொள்ளாச்சி: சமூக அறிவியல் பாடத்தேர்வு மிக எளிமையாக இருந்தது, என பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவியர் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 15ம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. மாணவியர் கருத்து கவிநயா: சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள் சிந்திக்கும் வகையில் இருந்தது. எனினும் முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. கல்பனா: இத்தேர்வு எளிமையாக இருந்தது. தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சிக்கு சென்ற போது, ஆசிரியர்கள் வழங்கிய அறிவுரையின்படி, வரைபடத்தில் முழு மதிப்பெண் கிடைக்கும் வகையில் எழுதியுள்ளேன். எளிமையாக இருந்ததால், முழு மதிப்பெண்கள் கிடைக்கும். வால்பாறை சமூக அறிவியல் தேர்வு குறித்து வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் கருத்து: சிபிதா: சமூக அறிவியல் தேர்வு எதிர்பார்த்ததைவிட மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண்களுக்கான கேள்விகள் மட்டும் சில கஷ்டமாக இருந்தன. இதுவரை எழுதிய தேர்வில் ஆங்கிலம் இரண்டாம் தாள், கணிதம் ஆகிய தேர்வுகள் மட்டும் கஷ்டமாக இருந்தன. ஆசிரியர்கள் சொல்லித்தந்த பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவறாமல் விடையளித்துள்ளோம். லட்சுமிதேவி: இத்தேர்வை பொறுத்த வரை படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், விடைகளை விறுவிறுப்பாகவும், தெளிவாகவும் எழுதினேன். இத்தேர்வை பொறுத்தவரை ஒரு மதிப்பெண்களுக்கான கேள்விகளை தவிர, மீதமுள்ள கேள்விகள் ஈசியாக இருந்தன. நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்