உள்ளூர் செய்திகள்

அரசு பல்மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர். மீர் முஸ்தபா ஹுசேன், மாணவர்கள் பட்டம் பெற்றதும் படிப்பு முடிந்து விட்டது என்று நினைத்து விடக்கூடாது. தொடர்ந்து இந்த துறையில் உள்ள நவீன மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் இப்போது 11,000 பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நிறைய திறமையான மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். மேலும் அவர் பேசியபோது, ஏழைகளுக்கு மருத்துவ உதவியை செய்யுங்கள், பணம் தானாக வரும் என்றார். முன்னாள் தலைமை செயலர் டி.வி.அந்தோணி, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ஆண்ட்ரூ சிம்கின், கல்லூரி முதல்வர் நாஸர் ஆகியோரும் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்